தாம்பரத்தில் சீருடையில் இருந்த காவலர் ஒருவரை போதை ஆசாமிகள் சுற்றி வளைத்து ஆவேசமாக கேள்வி எழுப்பி மிரட்டல் விடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள மணிமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல அந்த கடையில் இளைஞர்கள் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் அங்கு தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக பார் உரிமையாளர் போலீசாரின் அவசர எண்ணிற்கு புகார் கொடுத்துள்ளார்.

உடனே கார்த்திகேயன் என்ற காவலர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். மது போதையில் தகராறு செய்த வெங்கடேசன் என்ற நபரைக் கன்னத்தில் காவலர் கார்த்திகேயன் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் நண்பர்கள் மதுபோதையில் சீருடையில் இருந்த காவல் கார்த்திகேயனை சுற்றிவளைத்துக் கொண்டு ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதோடு, மிரட்டல் விடும் தொனியில் தகாத வார்த்தைகளால் பேசினர். அங்கிருந்து தப்பித்த காவலர் கார்த்திகேயன் விட்டால் போதும் என இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சிட்டாக பறந்தார். இந்த சம்பவத்தின் கட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.