லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.  முன்பதிவு தொடங்கியதும் முதல் இரண்டு மூன்று நாளைக்கு பெரும்பாலான காட்சிகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. முன்பதிவிலே ரூ.14 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே 'கூலி' படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரஜினி ரசிகர்கள் சிலர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டதோடு கோவிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர். ரஜினி ரசிகர்களான தாங்கள் பல ஆண்டுகளாவே அவரது படம் வெளியாகும் தருணங்களில் மண்சோறு சாப்பிட்டு வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் உடன் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.