புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளவர் கலா. இவர், இன்று மதிய உணவு தயாரிப்பதற்காக பெரிய குக்கரில் பருப்பு வேக வைத்துள்ளார். பருப்பு வெந்திருக்கும் என்ற நிலையில் எரிவாயுவை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கடந்து குக்கரை திறந்த போது திடீரென குக்கர் மூடி வேகமாக கழன்றி தெரித்து ஓடியுள்ளது.
குக்கரில் இருந்து சுடுதண்ணீர், பருப்பு, கடுமையான அனல் காற்று சமையலர் கலா மீது கொட்டியதில் உடலில் பல இடங்களிலும் வெந்து காயமடைந்துள்ளார். சத்தம் கேட்டு பக்கத்தில் நின்றவர்கள் கலாவை மீட்டு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சமையல் உதவியாளர் கலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/ambulance-2026-02-19-21-50-44.jpg)