Advertisment

“விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன்...” - தூய்மைப் பணியாளரை மிரட்டிய தவெக நிர்வாகி!

vsbabu

Controversy over the speech of TVK administrator threatened the cleaner

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதியின் தவெக செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் இன்று (22-02-26) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

மேலும், இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக என்.ஆனந்த் அறிவித்தார். அதன் பின்னர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசினர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஒருவர், தூய்மைப் பணியாளரை மிரட்டி விசிலடிக்க வைத்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகியான வி.எஸ்.பாபு கூறியதாவது, “நம்முடைய விசில் சின்னத்தை பார்த்தால் எல்லோருமே பயப்படுகிறார்கள். காலையிலேயே தூய்மைப் பணியாளர்கள் குப்பை அள்ள வரும்போது விசில் தான் அடிக்கிறார்கள். நாம் அடிக்க வேண்டிய விசிலை, அவர்கள் ரோட்டில் அடிக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேஷன், விசில் அடிக்க வேண்டாம், மைக் மூலமாக பேசுங்கள் என்று தூய்மைப் பணியாளர்களிடம் கூறிவிட்டார்கள்.

நான் வேலைக்கு அமர்த்திய ஒரு தூய்மை பணியாளரிடம், வீட்டருகே விசில் அடிக்கவில்லையென்றால் உன்னை உதைப்பேன் என்று கூறினேன். அதனால் அடுத்த நாள் காலையிலேயே விசில் அடித்துவிட்டார்” என்று கூறினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

perambur tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe