தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.. அந்த கட்சியில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திலுள்ளவர்களே அதிகபடியான ஆதிக்கம் செலுத்துவதும், எதிர்கட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கு பணிசுமை கொடுப்பதும் எழுதப்படாத சட்டமாக உள்ளது. மேலும், இவர்கள் கொடுக்கும் பணி சுமை எந்த கட்சியும் சாராமல் உள்ள தொழிளார்களின் தலையிலேயே விடிகிறது. இதனை எதிர்த்து யாராவது பேசினால் அவர்களுக்கு மேமோதான். அந்த வகையில் சேலம் கோட்டம் தர்மபுரியில் நடந்த ஒரு வில்லங்க விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செளந்தர ராஜன் என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சேலம் கோட்டம், தருமபுரி மண்டலம், பொம்மிடி போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு.. செளந்தர ராஜன் பணிமுடிந்து டூவீலரில் வீட்டிற்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் செளந்தர ராஜனுக்கு பணியில் இருக்கும்போது அடிக்கடி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த அவர்.. பணி நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.. விடுப்பு எடுத்து மருத்துவரிடம் விசாரிக்கலாம் என நினைத்துள்ளார். அதற்காக விடுப்பு எடுக்க பணிமனை செயலாளர் ஜி.மாது என்பவரிடம் கடிதம் கொடுத்தபோது.. அவர் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். தற்போது, இதுதொடர்பான ஆடியோ வெளியாகி.. பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த போக்குவரத்துறையில்.. மண்டலம், அதற்கு கீழ் கோட்டம் அதற்கு கீழ் கிளைமேலாளர் இந்த கிளைமேலாளர் கீழ் பரிசோதனையாளர்கள் என இவர்கள்தான் பணியாற்றுகிறார்கள். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான விடுப்பு, பேருந்து மாற்றம் போன்றவற்றை இவர்கள் தான் கொடுக்கவேண்டும். ஆனால் இவர்கள் தங்களுடைய பணியை சரியாக செய்யாததால் பணிமனை செயலாளர்கள் இந்த அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.. முறையாக பணிக்கே செல்லாமல், அவர்களின் பணிகளை மற்றவர்களிடம் கொடுக்கின்றனர். இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதற்கிடையில், எந்த கட்சியும் சாராமல் பணிபுரிகின்ற மற்ற தொழிலாளர்களுக்கு மட்டும், மீண்டும் பணிகளை கொடுத்து இரண்டு மூன்று சிப்பட் பார்க்கவைப்பது. மீறி எதிர்த்து கேட்டால் அவர்களுக்கு பொய்யான புகார்களை கூறி மோமோ கொடுப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
இதனை கேட்கவேண்டிய அதிகாரிகள் கேட்காமல் இருப்பதாலே இது போன்ற சிக்கல் நாளுக்கு நாள் தொடர்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் இதை கேள்விக் கேட்டால்.. கேட்கும் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்கள். இதே போல், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்ட பணிமனை செயலாளர் மாது.. ஊழியர்களை மிரட்டி பண வசூல் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், டிரைவர் சௌந்தர் ராஜனிடம் கேட்டு சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இவர்களால் மற்றொரு டிரைவரின் மனைவியும் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். இதனிடையே, சேலம் கோட்டம் மட்டுமின்றி தமிழக முழுவதும் இதே கெதிதான் தொழிலாளிகள் குற்றம சாட்டுகின்றனர். மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில் திமுக அரசு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Follow Us