Advertisment

சர்ச்சை பேச்சு; சி.வி. சண்முகத்திற்கு மீண்டும் சம்மன்!

cv-shanmugam

விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் இலவசத் திட்டங்களுடன் இணைத்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

மேலும் சி.வி. சண்முகத்தின் இந்த பேச்சிற்கு அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதோடு சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் அனைத்து இந்திய மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சி.வி. சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.  

Advertisment

அதற்கு சி.வி. சண்முகம் தரப்பில் அன்றைய தினம் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட மாநில மகளிர் ஆணைய இந்த விவகாரம் தொடர்பாக சி.வி. சண்முகம் வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

summon Commission Women Speech controversy villupuram admk CV Shanmugam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe