தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின்படி இன்று (06/09/2025) தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும்.
நாளை (07/09/2025) கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எட்டாம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும். 9 ஆம் தேதியன்று தேனி, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, கோவையின் மலைப்பகுதிகள், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் தேதி சேலம், நாமக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.