அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். 

Advertisment

இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், பேராசிரியா் முத்துவேலாயுதம், இளங்கோ உள்ளிட்ட பலா் பேசினர். கூட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், பணப்பயன்கள் மற்றும் ஓய்வூதியத் தொகைகளை வழங்க கோரி கடந்த ஜனவரியில் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஜன.30-ஆம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

Advertisment

தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்று வந்த நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து புதன் கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மற்றும் கூட்டு நடவடிக்கை குழு சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.