வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இதில் தமிழகத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அலுவலர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.

Advertisment

வரும் நவம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி  இருந்தது.

Advertisment

அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.