விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும், அதிக தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும், மேலும் உள்ளாட்சியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இல்லையெனில், எங்களுக்கு யார் உரிய பங்கையும் மரியாதையையும் வழங்குகிறார்களோ, அந்தக் கூட்டணியில் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து பேசியதாவது: “அமைச்சர்களைப் பற்றி பேசும்போது எல்லோருக்கும் ரத்தம் கொதிக்கிறது. ஆனால் நம்ம பெருந்தலைவரைப் பற்றி பேசும்போது யாருக்கும் அதுபோன்ற உணர்வு இல்லை. ஆர்.எஸ். பாரதி பேசினார். ராஜீவ் காந்தி பற்றி பேசப்பட்டது. திருச்சி சிவா பேசினார். அவை எதுவும் உங்கள் காதுக்குச் செல்லவில்லை. ஆனால் நம்ம நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கேட்டபோது மட்டும் திமுகவுக்கு உடனே கேட்கிறது.
நம்முடைய கட்சி வளர வேண்டுமென்றால் முதலில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் கிராமப்புறங்களில் கட்சி வலுப்படும். இதைத்தான் நம்ம எம்.பி. கேட்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?. நம்முடைய இளம் தலைவர் ராகுல் காந்தியும் இதையே வலியுறுத்துகிறார். எம்.பி.யின் கோரிக்கை பிடிக்கவில்லை என்றால், நம்ம அக்கா கூறியதுபோல், ‘பிடிக்கவில்லை என்றால் வெளியே செல்லலாம்’ என்று சொல்லிவிடலாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/vdu-congress-vellumuthu-2026-02-17-12-01-51.jpg)
அடுத்து விசில் தயாராக இருக்கிறது. நாம் போய்க்கொண்டே இருக்கும்போது விசில் அடித்துக்கொண்டு, கையை காட்டிக்கொண்டு முன்னேறலாம். நம்முடைய அடுத்த கட்ட பயணம் குறித்து முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தக் கூட்டணி நமக்கு அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கவில்லை என்றால், யார் நமக்கு அதிகாரமும், அதிக சீட்டுகளும், உள்ளாட்சியில் இடஒதுக்கீடும், மரியாதையும் வழங்குகிறார்களோ - அந்தக் கூட்டணியில்தான் நாம் தொடர வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/vdu-congress-2026-02-17-12-01-00.jpg)