கடந்த 2008 ம் ஆண்டு, 14 வயதுடைய ஒரு சிறுமியின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம் தனது மகளை, அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எப்ஸ்டீன் என்பவர் தனது பார்ம் பீச் இல்லத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாரளித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது பீச் இல்லத்தில் பல சிறுமிகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எப்ஸ்டீன் அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அவர் கடுமையான சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார். இருப்பினும், விசாரணைக்காலத்தில் அவர் சிறையிலேயே மரணமடைந்தார்.
இருப்பினும், இது சம்பந்தமாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அதன் தரவுத்தளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் 300 ஜிகாபைட்டிற்கும் அதிகமான தரவுகள் மற்றும் கோப்புகள் போன்ற பல ஆதாரங்களை வெளியிட்டது. அதில், உலக அளவிலான பல முக்கிய புள்ளிகளின் பெயர்களும் இடம்பெற்று இருப்பதாகத் தகவல்கள்கள் வெளியாகின. அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், இது பற்றி மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக, 30 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், விடியோக்கள் போன்ற ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சம்பந்தமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் விவாதித்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அரசு மட்டும் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக எப்ஸ்டீனால் எழுதப்பட்ட (ஜூலை 19 தேதியிடப்பட்ட குறிப்பில்), பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்த இஸ்ரேலுக்கான மோடியின் அதிகாரப்பூர்வ பயணம் குறித்த விவரங்களும் அந்த கோப்புகளில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவிலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகினறன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/epsteinmodi-2026-02-02-18-51-49.jpg)