சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது 1965இல் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம், நேற்று (10-01-26) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது.

Advertisment

படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் வசனங்கள், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா வரும் காட்சிகள் என சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், காசை வீணாக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இப்படத்தை விமர்சனம் செய்துள்ளார். இப்படத்தில் காங்கிரஸுக்கு எதிராக வசனம் இருப்பதாக செய்தி வெளியிட்ட ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்த செய்தி உண்மையா? படம் பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்கபா.. இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை வீணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.