தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசுகையில், ''உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவை சில வருடங்களில் மொத்தமாக அழித்துவிடும். இந்திய விவசாயிகளால் அமெரிக்க விவசாயிகளுடன் போட்டி போடவே முடியாது. அவர்களுக்கு நம்முடைய இந்திய சந்தையை திறந்து விடுவது என்பது இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பதற்கு சமம். அதே போல மூன்று சதவீதம் வரி கட்டிக் கொண்டிருந்தோம் ஜவுளித்துறைக்கெல்லாம், இப்பொழுது இன்று 17 சதவீதம் வரி கட்டிக் கொண்ட வேண்டிய சூழலில் இருக்கிறோம். நம்முடைய இளைஞர்களுக்கான டேட்டா எதிர்காலம் எல்லாமே அழிக்கப்படுகிறது.

Advertisment

பிரதமர், பாஜக உடைய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பெயர் எப்ஸ்டின் பையிலில் இருக்கிறது. ஐந்து வயது முதல் 7 வயது, 9 வயது சின்னஞ்சிறு குழந்தைகளை பாலியல் கொடுமை செய்து, ஒரு தனித்தீவில் வைத்து பல நாட்டின் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்களை எல்லாம் கூப்பிட்டு அந்த இடத்தில் தொடர்ந்து பெண்களை சீரழித்து வந்திருக்கிறார். இந்த மாதிரியான ஒரு மிக மோசமான கொடூரமான ஒருத்தருடன் இந்திய பிரதமருக்கு என்ன வேலை. ஹர்தீப் சிங் பூரிக்கு என்ன வேலை. அதனால் தான் அமெரிக்க அரசாங்கம் எப்ஸ்டின் பைலை வெளியிடுகிறார்கள். 10 சதவீதம் தான் இருக்கிறது. இன்னும் முக்கால்வாசி பைல்கள் வெளியிடப்படவில்லை. வெளியிடப்படாத பைல்களில் சிக்கலான பிரச்சினைகள் இருக்கிறது என்பதால் இந்திய அமெரிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது என்கிறார்கள். இப்படி நாடு விற்கப்படும் சூழலில் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதன் காங்கிரஸ் படி எல்லா கட்சிகளும் செய்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அகில இந்திய பொதுச்செயலாளர் வேணுகோபால் தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார். மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடக்கும்.  அதற்குமேல் கூட்டணி தொடர்பான விஷயங்களுக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் தான் பதிலளிக்க வேண்டும். எம்பிக்கள் பதிலளிக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. எங்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது. திமுகவிற்கு ஒரு கருத்து இருக்கிறது. எல்லா கட்சிக்கும் கருத்து இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம். அது பேச்சுவார்த்தையின் முடிவில் தான் தீர்மானிக்கப்படும். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை காங்கிரஸ் தொண்டர்களுடைய மரியாதை காப்பாற்றப்பட வேண்டும். அதுதான் எங்களுடைய கருத்து'' என்றார்.

Advertisment

தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறித்த கேள்விக்கு  ''நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்.