Advertisment

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாயைக் கொண்டு வந்த விவகாரம் : காங்கிரஸ் எம்.பி.க்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

parliment-renuka-chodry-dog

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதத்தில் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர். மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்த பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரின் போது, தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ரேணுகா சௌத்ரி தெருநாயுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். பாராளுமன்ற வளாகத்திற்குள் அவர் நாயை அழைத்து வந்ததால், அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரேணுகா நாயை அழைத்து வந்ததற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Advertisment

இதற்கு, பதிலளித்த ரேணுகா,  “இந்த நாய் வரும் வழியில் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. காயமடைந்துள்ள அந்த நாயை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அதனை உடன் எடுத்து வந்தோம். தற்போது நாயை எனது ஓட்டுநர் எடுத்துச் சென்றுவிட்டார்" என்று தெரிவித்தார். மேலும், அவர்களிடம் "இந்த நாய் கடிக்காது, கடிப்பவர்கள் உள்ளே தான் இருக்கிறார்கள். அவர்கள் அரசை நடத்துகிறார்கள்" என்று பதிலுரைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்பிக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, அப்படியென்றால் அவர் எங்களை நாய் என்று சொல்கிறாரா? என பாஜக செய்தி தொடர்பாளர் செஷாத் பூணாவாலா கேள்வி எழுப்பினார்.   

Advertisment

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்திற்குள் தெரு நாயுடன் வந்ததால், பாதுகாப்பு விதி மீறப்பட்டதாகவும், அவையில் உறுப்பினர்கள் குறித்து அவமதிப்பான கருத்துக்களைக் கூறியதாகவும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரேணுகா சௌத்ரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், வருகின்ற 23ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   இதனிடையே, ரேணுகா சௌத்ரி, "ஒரு வாயில்லா ஜீவனை அரவணைத்தது, தற்போது ஒரு பிரச்சனையாக மாறி பேசுபொருளாக மாறியுள்ளது. அரசு செய்வதற்கு எந்த வேலையும் இல்லையா? நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு தினமும் நம்மைக் கடிப்பவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Notice budget session congress mp dog parliament winter session Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe