மத்தியஅரசின் நூறு நாள் வேலை திட்டத்தின், மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா.சம்பத்குமார்  வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, வட்டார தலைவர்கள் செழியன், சிறப்பு அழைப்பாளராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன், மாநில செயலாளர்கள் பி.பி.கே சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் செந்தில்வேலன் ஆகியோர்கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Advertisment

இதில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை சீரழிக்க மோடி அரசு செயல்படுகிறது என்று கோசங்களை எழுப்பினார்கள்.