பிரதமர் மோடி கடத்தப்படுவாரா? என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டங்களைத் முன்வைத்து வருகிறது. காங்கிரசின் தொடர்ச்சியான இந்த விமர்சனங்களின் நீட்சியாக, முன்னால் மகாராஷ்டிரா முதல்வரும், காங்கிரசின் மூத்தத் தலைவருமான பிருத்விராஜ் சவான், ‘வெனிசுலாவுடன் இந்தியாவை ஒப்பிட்டு, வெனிசுலாவில் நடந்தது போன்றது இந்தியாவில் நடக்குமா? டிரம்ப் நமது பிரதமரைக் கடத்திவிடுவாரா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸ் நகரின் பல பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. குண்டு வெடிப்பால் தலைநகரின் பலப் பகுதிகளில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதனால், வெனிசுலாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா, கொலம்பியா, கியூபா போன்ற உலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருவதோடு, இந்த சம்பவம் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதற்றமான சூழ்நிலையில் சவானின் இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.பி. வைத், சவானின் அறிக்கையைக் கண்டித்து, ‘இது முழு நாட்டிற்கும் அவமானமான ஒரு செயல்’ என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களில், பலரும் சவானின் இந்தக் கருத்துக்கு கண்டனைகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிலர், இந்தியா ஒரு அணுசக்தி நாடு என்பதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற ஒரு ஒப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வருகினறனர்.
அமெரிக்கா இந்திய மீது விதிக்கும் வரிச்சுமைகளை குறித்தான விமர்சனத்தின் ஒரு பகுதியாக இந்த பேச்சு இருந்த போதிலும், இந்த கருத்து தற்போது அந்த வரி மீதான விமர்சனத்திலிருந்து கவனத்தை திசை திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அரசாங்கத்தின் மீது வைத்த விமர்சனத்தின் தொடர்ச்சியாக, சவானின் இந்தக் கருத்துக்கள் பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/venemodii-2026-01-07-15-59-26.jpg)