congress leader Sonia Gandhi admitted to hospital
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் இன்று டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர், பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us