தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, விருப்ப மனு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாகவும் மும்முரமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் அடுத்தடுத்து சர்ச்சையைக் கிளப்பி வருவதால் காங்கிரஸ் தலைமை சிக்கலில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், கடந்த சில மாதங்களாகவே ஆட்சியில் பங்கு அதிகராத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்களின் இந்த கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருப்பினும், மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

Advertisment

இந்த நிலையில் நேற்று தமிழகம் வந்திருந்த அகில் இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் கோரிக்கை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்ற நிலைப்பாடு வந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த குடைச்சல்களை சரிசெய்த காங்கிரஸ் தலைமைக்கு அடுத்த சிக்கல், அசாம் காங்கிரஸ் தலைவர் போராவின் ராஜினாமா மூலம் வந்துள்ளது.

அதாவது அசாம் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா, கட்சியின் முகமாகப் பார்க்கப்பட்டவர். இந்த சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அசாமிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மாவட்ட, வட்ட தலைவர்கள் கூட கட்சி மேலிடம் தலையிட்டதாலும், தேர்தல் நேரத்தில் அடித்தள நிர்வாகிகளை மேலிடம் மாற்றியதாலும் போரா கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் முக்கியத் தலைவரான பூபன் குமார் போரா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து பா.ஜ.கவில் ஐக்கியமாகியுள்ளார். போராவின் விலகலால் அசாமில் காங்கிரஸ் வலுவிழுந்து காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும், பா.ஜ.கவில் போரா இணைந்ததால் அசாமில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். 

Advertisment