தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாகவும், கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள், இணையத்தின் இணைய மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பக்கூடிய சட்டமன்றத் தொகுதியை குறிப்பிட்டு விருப்பமனு படிவத்தில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விருப்ப மனுவை இணைத்து இறுதி நாளான 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்பிக்கக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/congres-2025-12-09-22-24-51.jpg)