Congress district president meets TVK executives Controversy in Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நேற்று (23.12.2025) நடைபெற்றது.
முன்னதாக இதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டதால், இந்த விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அருமனையில் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராக் ஆகியோரை கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பினுலால் சிங் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. இந்த சூழ்நிலையில், த.வெ.க நிர்வாகிகளை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us