Advertisment

அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர் போஸ்டர்; கோவையில் பரபரப்பு!

103

கோவை மாவட்டம், குறிச்சி பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் சே. தாமோதரனுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வரவேற்பு பதாகையால், தற்போது மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

தாமோதரன், தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி, கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தந்துள்ளார். இந்த நலத் திட்டத்துக்காக, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் சரளா வசந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு பதாகை வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு பதாகை வைத்து நன்றி தெரிவித்துள்ளதால், மாவட்ட அரசியலில் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore edappadi k palaniswami congress admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe