வருகின்ற 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதையொட்டி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும், பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம், நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் என பல்வேறு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தேசியக்கட்சிகளும், நிர்வாகிக்களுக்கான தேர்தல் பணி சம்பந்தமான கூட்டங்கள், கூட்டணி குறித்த ஆலோசனைகள் குறித்து பேசிவருகின்றன.
இதன் நீட்சியாக நேற்று (14-12-25) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய போது , தன்னுடைய " தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் " பரப்புரைப் பிரச்சாரம் ஜனவரியில் முடிவடைவதையடுத்து, இதன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மோடி அல்லது அமித்ஷா ஆகிய இருவர்களில் யாரேனும் ஒருவர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அதோடு பாஜக போட்டியிட விரும்பும் 65 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த பட்டியலில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, கோவை, கன்னியாகுமாரி உள்ளிட்ட தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசியத் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.இருப்பினும் அந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறாத நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு நடைபெறும் என கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை , இந்த சந்திப்பு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என்றும், தேசிய தலைமை அமைத்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கான ஐவர் குழு , கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசிவருவதாகவும் கூறியிருக்கிறார். அதோடு இந்தியா கூட்டணி வலுவாக உள்ளளவும் தவெக வுடன் கூட்டணி என்கிற வதந்தி உண்மையல்ல என்றும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/a-2025-12-15-17-47-13.jpeg)