தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்த நிலையில் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காரைக்காலுக்கு வந்துள்ளார். கோட்டைச்சேரி வழியாக நகராட்சி சந்தை திடலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக பாஜக தேர்தல் சுவர் ஓவியங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொண்டார். ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்ட்ட தாமரை சின்னத்தின் அவுட் லைன் வரைபடத்தில் அமித்ஷா வண்ணம் தீட்டினார். அப்போது முதலில் காவி வண்ணத்தை பூசிய அமித்ஷா, அடுத்து பச்சை வண்ணத்தை தவறுதலாக பூசினார்.அருகிலிருந்தவர்கள் தவறை அமித்ஷாவுக்கு தெரியப்படுத்த முயன்றபோதும் அமித்ஷா பச்சை நிறத்தை பூசியதால் தடுக்காமல் விட்டுவிட்டனர்.
அமித்ஷா வருகை காரணமாக காரைக்கால் பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காரைக்காலில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/b4-2026-02-14-12-26-45.jpg)