Comrade Nallakannu's health has suffered a major setback
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பு காரணமாக பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தோழர் நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று இரவு முதல் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us