Advertisment

நயினார் நாகேந்திரன் மீது காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்

a5872

Complaint filed against Nainar Nagendran at the Police Commissionerate Photograph: (bjp)

கடந்த 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் எனவும் விஜய் அவரது குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Advertisment

நயினார் நாகேந்திரனின் இந்த நாகரீகமற்ற பேச்சு சர்ச்சையானது. இதற்கு பலரும் தற்போது கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து த்ரிஷா தரப்பில் அவரது வழக்கறிஞர் நித்யயேஷ் நடராஜ் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், 'அரசியலில் உயர் பதவியில் வகிக்கும் ஒருவரால் இதுபோன்ற மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்படும் என்று த்ரிஷா எதிர்பார்க்கவில்லை என்றும் எந்த அரசியல் கட்சியுடனும் அவருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேவையில்லாத விஷயங்களுக்கு த்ரிஷா பெயரை பயன்படுத்த தேவையில்லை' எனவும் கூறியுள்ளார். இந்த அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, ''அவமரியாதை எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.  

Advertisment

தொடர்ந்து நயினார் நாகேந்திரன்  தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் அனுமதிப்பதில்லை, நானும் அப்படி பேசியதில்லை. அன்றைக்கு நான் பேசியது வாய் தவறி வந்தது. இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் ஏற்கனவே என்னிடம் பேசி இருந்தார். பின்பு தமிழக பாஜக முன்னாள் தலைவரும் என்னிடம் பேசினார். இந்த விவகாரத்தில் நான் பேசியது யார் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

b19
Complaint filed against Nainar Nagendran at the Police Commissionerate Photograph: (tvk)

இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில் 'பெண்களின் கண்ணியம்  காப்பது மற்றும் சமூக நல்லிணக்கத்தை கருதி இந்த புகாரை அளித்திருக்கிறோம். பாஜகவின் மாநில தலைவர் நயினராகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது எங்களுடைய கட்சியின் தலைவர் விஜய் பற்றி மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில், இழிவுபடுத்தும் நோக்கத்துடன் அவதூறு ஒன்றை பரப்பி உள்ளார்.

ஒருமையில் பேசி, இருவருக்கும் சம்பந்தம் இல்லாத நிகழ்வு பற்றியும், சேலம் மாநாட்டிற்கு சற்றும் சம்பந்தமில்லாத நடிகை திரிஷாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. விஜய்யின் ஒட்டுமொத்த நன்மதிப்பையும் குறைக்கும் வகையிலும், அவர் நேரில் இருந்து பார்த்தது போன்றும அருவருக்கத்தக்க, ஜீரணிக்க இயலாத ஒன்றை சொல்லி  கலவரத்தை தூண்டும் வகையில் பேசி இருக்கிறார். எனவே நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

police commissioner office tvk vijay nayinar nagendran b.j.p
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe