இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு (வயது 100) வீட்டில் இருந்தபோது கடந்த 22ஆம் தேதி (22.08.2025) கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 

Advertisment

அதோடு அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு ஐயா அவர்கள் நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். தோழர்கள், பொதுமக்கள் மருத்துவமனைக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு தோழமையுடன் கேட்குக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா நல்லகண்ணு குறித்து, அவரது பேரனிடம் தொலைபேசி வாயிலாக த.வெ.க தலைவர் விஜய் நலம் விசாரித்தார். அதே போன்று நல்லகண்ணுவின் நேரில் சந்தித் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது உடல்நிலை குறித்து  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.