Commercial cylinder prices increase again
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலையில் மாதந்தோறும் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து ரூ.1,849க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
கடந்த இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.110 உயர்ந்துள்ளது.
Follow Us