வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின்  விலை உயர்ந்துள்ளது.

Advertisment

வணிக  பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து 1,899.50 ரூபாய்க்கு இன்று (01.02.2026) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

கடந்த ஜனவரி மாதம் மாதம் 1849.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 50 ரூபாய் விலை உயர்ந்து 1,899.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 868.50 பைசா என்ற அதே விலையில் தொடர்கிறது.