வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலையில் மாதந்தோறும் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 34 ரூபாய் 50 பைசா குறைந்து 1,789 ரூபாய்க்கு இன்று (01.08.2025) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 1823.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 34 ரூபாய் 50 பைசா குறைந்து 1,789 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 868.50 பைசா என்ற அதே விலையில் தொடர்கிறது.