தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாாசத்திரம் காவல் சரகம் சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20). மதுரை அண்ணா பல்கலைக் கழகத்தில் 2 ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கல்லூரிக்கு செல்ல புறப்பட்ட போது அவரது அண்ணன் கார்த்திக் பஸ் நிறுத்தத்தில் அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார்.
மறு நாள் காலை மல்லிபட்டினனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணு சடலமாக மீட்கப்பட்டார். மேலும் பள்ளி சுவரில் "என் சாவுக்கு காரணம் ஜெ.பாபு" என்று எழுதி வைத்ததுடன் சட்டைப் பாக்கெட்டில் கடிதமும் எழுதி வைத்திருந்ததை போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில் நானும் ஆங்கில ஆசிரியர் பாபுவும் தகாத உறவில் இருந்ததாகவும் என் சாவுக்கு அவரே காரணம் என்றும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/25/a5631-2025-10-25-22-40-08.jpg)
தொடர்ந்து விஷ்ணுவின் அண்ணன் கார்த்திக் (27) கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் ஆசிரியர் பாபு விஷ்ணுவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாபுவை கைது விசாரணை செய்த போது அவரது பேக்கில் இருந்து சில வகையான மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/25/a5647-2025-10-25-22-40-37.jpg)
மேலும், ஆங்கில ஆசிரியர் பாபு தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுத்துப்பூர்வமாகத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மாதவன் இன்று சனிக்கிழமை ஆங்கில ஆசிரியர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவன் இறப்பில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பள்ளியில் அதே சின்னமன கிராமத்தைச் சேர்ந்த தற்காலிக ஆசிரியை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/a5630-2025-10-25-22-39-42.jpg)