கல்லூரியில் நடைபெறும் அநீதிகளுக்கு குரல் எழுப்பிய காரணத்திற்காக 10 ஆண்டுகளாக ஊதித்தையும் பிடித்தம் செய்து சர்வாதிகாரத்தனம் செய்யும் கல்லூரி செயலரை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் அரசு உதவிபெறும் மீனாட்சி மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு 60 மேற்பட்ட பேராசிரியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பணிபுரியும் சுஜாதா, அகிலாதேவி, வெண்ணிலா ஆகிய 3 பேராசிரியர்கள் 07.10.2025 தேதி அன்று அக்கல்லூரி வளாகத்திற்குள்ளே 'பேராசிரியர்களுக்குள்ளே பாகுபாடு காட்டாதே; எங்களின் ஊதியத்தை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்' என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த பேராசிரியர்களின் போராட்டத்தின் பின்புலமாக இருப்பது இக்கல்லூரியில் செயலராக பணிபுரியும் கே.எஸ்.லட்சுமி என்பவரே, அரசு உதவிபெறும் மீனாட்சி மகளிர் கல்லூரியில் இவர் வைப்பதுதான் சட்டம். அரசு ஆணைகளோ யு.ஜி.சி. வழிகாட்டுதல்களை இவர் மதிப்பதில்லை. இவருக்கென்று தன்னிச்சையாக சட்டத்தை வகுத்து அதன்படி நடக்கவில்லை என்றால் அவர்களை ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகையில் இருந்து எதுவும் கிடைக்காதபடி செய்தல், மாணவர்களாக இருந்தால் தேர்வு எழுத விடுவதில்லை, இப்படி , தமிழக அரசின் சேர்க்கை விதிமுறைகளை படி மாணவர்களின் சேர்கையின் போது பின்பற்றுவது இல்லை. மாறாக மாணவர்களின் சேர்க்கைகாக கொடுக்கப்படும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டு அந்த விண்ணப்பதின் படி மாணவர்களை வரவழைத்து அவர்களின் மதிப்பெண் பட்டியல் படி அவர்களுக்கு பிடித்த பாடப்பிரிவு கிடைப்பதும் இல்லை. இவர்கள் கொடுப்பதும் இல்லை, மாறாக பணம் கொடுத்தால் அவர்களுக்கு பிடித்த பாடப்பிரிவோடு அவர்களுக்கு இந்த கல்லூரியில் சீட் கிடைக்கும். இல்லை என்றால் எவ்வளவு அதிகப்படியான மதிப்பெண் இருந்தாலும் அவர்களுக்கு இங்கு சீட் கிடைக்காது.
இதுபோன்று சேர்க்கப்படுகின்ற மாணவர்களிடமிருந்து பெறும் கல்விக் கட்டணம் தேர்வு கட்டணம் என எதற்கும் ரசீது எதுவும் கொடுக்கப்படுவதில்லையாம். மேலும் கல்விக் கட்டணத்தை வங்கிக் கணக்கின் மூலமாகவே கட்ட வேண்டும் என விதி இருந்தாலும், அதை மீறி செய்து வருகின்றனர். மேலும் கல்லூரி ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே நடத்தப்படவேண்டும் ஆனால் இவர்கள் 7 மணி நேரம் கல்லூரி நடத்துகின்றனர். ஒரு மாணவர் இக்கல்லூரியில் சேர்ந்து பிறகு அவருக்கு மற்றொரு கல்லூரியில் இருந்து நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவரோ சீட்டோ, அல்லது அக்கிரி பாடபிரிவோ, செவிலியிரோ அவர்களுக்கு கிடைத்து அந்த பாடப்பிரிவு படிக்க செல்ல ஆசைப்பட்டு டி.சி கேட்டாலோ அதற்கு மூன்று ஆண்டுக்கான கட்டணத்தை கட்டிவிட்டு பிறகே அவருக்கு டி.சி. கொடுப்பார்களாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/07/a5441-2025-10-07-21-54-50.jpg)
கல்லூரியில் நேரத்திற்கு காலதாமதமாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ அவர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்வது இப்படி மாணவர்களுக்கு நிகழும் கொடுமையை ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசு உதவி பெறும் மீனாட்சி கல்லூரி நிரந்தர பேராசிரியர்களை பலரை அக்கல்லூரி வளாகத்திற்குள்ளே உள்ள சுயநிதி கல்லூரியில் வகுப்பு எடுப்பதற்கும் மற்றும் தேர்வு பணிகளுக்கும் பயண்படுத்துவார்களாம். அதேபோல் சுயநிதி கல்லூரியில் நிகழ்வுகளுக்கும், லயன்ஸ் கிளப் இல் கட்டாயமாகச் சேர்ந்து பணிபுரிய வேண்டும். அதற்கான நிதியை பேராசிரியர்கள் கொடுக்க வேண்டும். மேலும் கல்லூரி முடிந்த பிறகும் பல மணி நேரம் காத்திருந்து இரவு வருகை பதிவேட்டில் கையொப்பம் போட்ட பிறகே வீட்டிற்கு செல்ல முடியும் என பல குளறுபடி இருந்தது.
இதை எதிர்த்து அகிலா தேவி, சுஜாதா, வெண்ணிலா இந்த மூன்று பேராசிரியர்களும் ஒன்று சேர்ந்து நீங்கள் செய்வது நாயமா ? நாங்கள் அரசு உதவிபெறும் பேராசிரியர்கள் நாங்க எதற்கு உங்க தனியார் கல்லூரயில் பாடம் எடுக்க வேண்டும் எங்களால் முடியாது என மறுத்துள்ளனர். இதை காரணமாக காட்டி அக்கல்லூரியின் செயலர் லட்சுமி இந்த மூன்று பேராசிரியர்களையும் 2015-17 வரை இரண்டு ஆண்டு மாத ஊதியத்தை கொடுக்காமலும் நிறுத்திவைத்துள்ளார். இதற்கு நீதிமன்றம் சென்று நிறுத்தி வைத்த பணத்தை மீண்டும் பெற்றுள்ளனர். மேலும் 2015 ஆம் ஆண்டில் இருந்து இது நாள்வரையிலும் மாத ஊக்க ஊதியம், பணி மேம்பாடு தொகை, ஏழாவது ஊதியக்குழு ஊதியம் என அனைத்தயும் இதுவரை 10 ஆண்டுகளாக கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளார்களாம். இதற்கு மீண்டும் நீதிமன்றம் சென்று அதற்கான தீர்ப்பும் 2023 ஆம் ஆண்டு பெற்றும் இதுநாள்வரையும் இவர்களின் ஊதியத்தை வழங்காமல் உள்ளதால் உயர் கல்வித்துறை இணை இயக்குனர் சுடர்க்கொடி பல முறை அக்கல்லூரியிடம் இவர்களுக்கான கல்லூரி பரிந்துரை கேட்கப்பட்டும், கல்லூரி செயலர் கொடுக்காமல் அலைகழித்து வருகிறாராம். இதனாலே இந்த மூவரும் எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை கல்லூரிக்குள்ளே உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராடி வருகின்றனர்.
தான் வைத்தது தான் சட்டம் எனவும் அரசு நிர்ணயித்துள்ள சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் இல்லை என்றால் வேலையை விட்டு நின்றுவிடுங்கள் என மிரட்டி பணியவைத்து பணியை செய்ய வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த அடிப்பணியாதவர்ளுக்கு மாத ஊதியம், ஊதிய உயர்வு, பணி மேம்பாடு என எதையும் கொடுக்காமல் நிறுத்திவைத்து மிரட்டுவதால் அனைவரும் அவர் சொல்லுவதையே கேட்டு பணிபுரிந்துள்ளனர். இதில் சுஜாதா கணினித்துறை பேராசிரியர், அகிலா ஆங்கிலத்துறை பேராசிரியர் ,வெண்ணிலா தமிழ்த்துறை பேராசிரியர் முறைகேடுகளையும் கொடுமைகளையும் தாங்கிக் கொள்ளாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.