விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆசாரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சோலை ராணி (வயது19). இவர், தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ. பயின்று வந்தார். இத்தகைய சூழலில் தான் தனது, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்த சம்பவம் நடந்த இரவு, அவரது தாய் மருத்துவமனையில் பணியில் இருந்த நேரத்தில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி மரணம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கல்லூரியில் ஏற்பட்ட காதல் தொடர்பான பிரச்சனையே இந்த துயர சம்பவத்திற்கு பின்னணி காரணமாக இருக்கலாம் என்பது தெரிய வந்தது. அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி பழகியதாகவும், இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். 

Advertisment

இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியை கல்லூரி முதல்வர் அறை முன்பாக நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும், கடுமையாக கண்டித்ததாகவும், ‘இனி இப்படிச் செய்ய மாட்டேன்’ என எழுதப்பட்ட மன்னிப்பு கடிதம் ஒன்றை மாணவியிடமிருந்து பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறுகின்றனர். அதன்பின் சில மணி நேரங்களுக்குள் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கல்லூரி முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டுள்ளார்.