கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளதில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் அருகே, சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம், ஆளும்  திமுக அரசின் மீது விழுந்த மற்றொரு கரும்புள்ளி'' என தெரிவித்திருந்தார்.

Advertisment

7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.