Advertisment

ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி; மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை!

siren-police

கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (02.11.2025) இரவு ஆண் நண்பருடன், தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியே வந்த 3 இளைஞர்கள் காரில் இருந்த இருவரையும் மிரட்டியுள்ளனர். அதோடு ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி சுய நினைவிழக்கச் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

Advertisment

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் பெண் அளித்த புகாரின் பெயரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். பெண்ணின் ஆண் நண்பர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு மயக்க நிலையில் இருந்து மீண்ட ஆண் நண்பர், தனது தோழியைத் தேடியுள்ளார். அதோடு காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.  

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று (03.11.2025) அதிகாலை மீட்டுள்ளனர். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Police investigation incident college student Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe