தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

Advertisment

மதிமுக சார்பில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் இருந்து மதுரை வரை மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடைப்பயண இயக்கம் நடைபெறவுள்ளது. இந்த நடைப்பயண இயக்கத்தை தொடங்கி வைப்பதற்காக, இன்று (16-12-25) சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் அழைப்பிதழை கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மாநில நிர்வாகிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

Advertisment

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்த்து பட்டா இல்லாமல் நீண்ட காலமாக வசிக்கக்கூடிய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என இன்று (16-12-25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுவாமி சிவானந்த சாலையில் பேரணை நடத்தவுள்ளனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பெ.சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கான பணி நிரந்தரம், அவர்களுக்கான காலமுறை ஊதியத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வைத்துள்ளனர்.