Advertisment

விண்ணில் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்!

rocket

CMS-03 satellite launched

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தயாரிக்கப்பட்ட எல்விஎம் 3-எம்5 ராக்கெட் இன்று (02-11-25) விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில், 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7 ஆர்) என்ற செயற்கைகோள் பொறுத்தப்பட்டு விண்ணில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 170 கி.மீ தூரம், அதிகபட்சம் 29,970 கி.மீ தொலைவு கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

ரூ.1,600 கோடியில் உருவாக்கப்பட்டு, தொழில்நுட்ப வசதிகளுடன்  தயாராகியுள்ள இந்த செயற்கைகோள், இந்திய கடற்படை, கடல்சார்பு பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்ளது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு ஏவப்பட்டதில், இந்த ராக்கெட் தான் அதிகபட்சமாக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைகோள். அதனால், இந்த ராக்கெட்டை ‘பாகுபலி’ ராக்கெட் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

Advertisment

ராக்கெட் ஏவுதலுக்கான 25:30 மணி நேர கவுண்ட்-டவுன் நேற்று மதியம் 3:56 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், இன்று மாலை 5:26 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 

ISRO satellite Rocket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe