Advertisment

“முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்” - முதல்வர்!

ford-mks-mou

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இன்று  (31.10.2025) தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன இன்ஜின் (Next - Gen Engine) உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. 

Advertisment

இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது. தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்றைய நாள் நடந்த ஒரு விசயம் மனதுக்கு மிகவும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது. 

trb-raja-sec-pm

ஏனென்றால் நீண்ட நாட்களாக பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று வெற்றி பெற்றிருக்கிறோம். இன்று தமிழ்நாட்டில் போர்ட் நிறுவனம் மீண்டும் தனது தொழிற்சாலையைத் துவங்கும் என்று உறுதி அளித்து ஒரு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மார்ட்டின் எவரட், மேத்யூ காட்லிஸ், சிவமனட்ட உள்ளிட்ட பலரும் நேரடியாக வந்திருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மற்றும் தொழில்துறையின் அரசு அதிகாரிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

mk stalin tn govt Company car ford
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe