தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (22.08.2025) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். 

Advertisment

முன்னதாக இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் தமிழுக்காக நாங்கள் தான் எல்லாம் செய்தோம். எல்லாம் செய்தோம் என்று சொன்னார். நான் கேட்கிறேன் நீங்கள் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு? . வாக்குறுதி எண் 503இல் சிலிண்டருக்கு 100 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னார்களே முதலமைச்சர் அண்ணாச்சி அந்த வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு?. வாக்குறுதி எண் 504இல் பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் அண்ணாச்சி உங்களுடைய இந்த வாக்குறுதி என்ன ஆச்சு?. 116இல் மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டி கொடுப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி அது என்ன ஆச்சு?. 159இல் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கல்விக்கடன் வழங்குவோம் என்று சொன்னீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்னாச்சு. 

வாக்குறுதி எண் 285இல் தூய்மை பணியாளர் நிரந்தரம் ஆக்குவோம் என்று சொன்னீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்னாச்சு. 356இல் அரசு மருத்துவமனைகளில் பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்ன ஆச்சு. 163இல் மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் எல்லா எல்லாம் ஏற்பாடு என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்ன ஆச்சு. 221இல் மாதம் ஒருமுறை மின்சார கட்டண பில் அமைப்போம் என்று சொன்னீர்களே உங்களுடைய வாக்குறுதி என்ன ஆச்சு. சொத்து வரி என்ன ஆச்சு. மின் கட்டணம் உயர்வு என்ன ஆச்சு. 

மின்சாரத்தைத் தொட்டால் சாக்கடிக்கும். ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தைப் பார்த்தாலே சாக்கடிக்கும். 187இல் அரசு அலுவலகங்களில் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்னாச்சு?. வாக்குறுதி என் 50இல் ஒன்றியந்தோறும் தானிய கிடங்கு அழைப்போம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி உங்களது வாக்குறுதி என்ன ஆச்சு. 183இல் பகுதிநேர ஆசிரியர் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னீர்களே முதல்வர் ஸ்டாலின் அண்ணாச்சி உங்களுடைய வாக்குறுதி என்ன ஆச்சு இன்னும் சொல்லிக்கொண்டே போனால் இன்னும் 400 வாக்குறுதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்” எனப் பேசினார்.