''CM sir, if you are thinking of buying some bhaji...'' - Vijay Tvk speech Photograph: (tvk)
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் விளக்கம் அளித்து வீடியோ வென்ற வெளியிட்டுள்ளார். அதில், ''அனைவருக்கும் வணக்கம். என்னுடைய லைஃப்ல இந்த மாதிரி ஒரு பெயின் ஃபுல்லான சிச்சுவேஷன நான் பேஸ் பண்ணதே கிடையாது. மனசு முழுக்க வலி. வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வந்தார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அவர்கள் என் மேல் வைத்திருக்கிற அன்பும் பாசமும். அந்த அன்புக்கும் பாசத்திற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மத்த எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களுடைய சேஃப்டி அதில் எந்த காம்ப்ரமைசும் பண்ணி விடக்கூடாது என்பது என் மனதில் ஆழமாக இருக்கும். அந்த எண்ணம் இந்த அரசியல் காரணங்களை எல்லாத்தையும் தவிர்த்து விட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு மக்களோட சேஃப்டியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான இடங்களை பார்த்து பர்மிஷன் கேட்பது.
காவல்துறையில் அதற்கு விஷ் பண்ணி பெர்மிஷன் கேட்போம். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நானும் மனுஷன் தானே. அந்த நேரத்தில் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது எப்படி விட்டுட்டு கிளம்பி வர முடியும். நான் திரும்ப போகணும் என்று இருந்துச்சு .ஆனா அதுக்கு ஒரு காரணம் காட்டி அங்கு வேறு சில பதட்டமான சிச்சுவேஷன், வேற சில அசம்பாவிதங்கள் அது மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் அதை அவாய்ட் பண்ணினேன்.
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தெரியும் என்ன சொன்னாலும் இது ஈடு ஆகாது என்று தெரியும். ஹாஸ்பிடல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அனைவரும் உடல்நலம் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். கூடிய சீக்கிரம் உங்கள் எல்லாரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை எங்களுடைய நிலைமையை புரிந்து கொண்டு எங்களுக்காக பேசுகின்ற அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட ஐந்து மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் சொல்லும் பொழுது கடவுளே நேரில் வந்து இறங்கி வந்து உண்மைகளை சொல்ற மாதிரி தோணுது. சீக்கிரமே எல்லாம் உண்மைகளும் வெளியே வரும். ஸ்பாட்டில் பேசியதை தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை. நாங்களும் மனுஷன் தானே. எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தோழர்கள் மேல் எஃப்ஐஆர், சோசியல் மீடியாவை சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் அவர்கள் மீது எல்லாம் எஃப்ஐஆர் போட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிஎம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தது என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள். நண்பர்களே தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக. இன்னும் தைரியத்தோடு கண்டினியூ ஆகும்'' எனப் பேசியுள்ளார்.