முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்தியலிங்கம் சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Advertisment

இந்த நிலையில், வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் உள்பட 10,000 மாற்று கட்சியினர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (26-01-26) தஞ்சாவூரில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தாய்க்கழகமான திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அதற்கு பின்னால் ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த சிறப்பான இணைப்பு விழாவை நடத்தி கொண்டிருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்து கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல திமுகவில் உள்ள அனைவருக்கும் வந்திருக்கிறது.

Advertisment

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் வைத்தியலிங்கம் பணியாற்றி அவர்களுக்கு விசுவாசமாக இருந்து சிறப்பாக சுறுசுறுப்பாக எல்லோரையும் கவரக்கூடிய வகையில் பணியாற்றுவார். அந்த காட்சியை நான் பார்த்தது உண்டு. ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி உடைந்து சின்னாபின்னமாகி  இருந்த நிலையில் அவர் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிற அந்த காட்சியை நான் பார்ப்பேன். அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்துகொண்டே இருக்கும். எதையோ பறிகொடுத்தது போல் உட்கார்ந்திருப்பார். ஏதோ வேண்டா வெறுப்போடு சில கேள்விகளை கேட்பார். வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கிற காட்சிகளை நான் பலமுறை சட்டமன்றத்தில் பார்ந்திருக்கிறேன். சுயமரியாதையோடு நாம் இருக்க முடியவில்லையே, சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது என்பதை இப்போது நான் உணர்ண்டு கொண்டேன்.

அவர் கொஞ்சம் லேட்டா வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா பணியாற்ற போகிறார். அது தான் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவில் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். 

Advertisment