தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட சிலரும் உடண் இருந்தனர். 

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு. 

Advertisment

அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள  ஸ்வென் வோர்ட்மேன்,  ஷரோன் நாதன், டாரியா லாம்ப்ரெக்ட் (Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht) ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த கொலோன் பல்கலைக்கழகநூலக பயணம் அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.