Advertisment

“தி.மு.க. - 75 அறிவுத் திருவிழா” - முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

dmk-75-arivu-thiruvizha-mks

திமுகவின் 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில், “ திமுக 75 அறிவு திருவிழா” என்ற நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (08.11.25) காலை தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை இன்று காலை 9:30 மணி அளவில்  அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார். அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொள்ள உள்ளார். 

Advertisment

மேலும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள, “இரு வண்ண கொடிக்கு வயது 75” என்ற கருத்தரங்கம் 10 அமர்வுகளுடன் இன்றும் நாளையும் (09.11.2025) நடைபெற உள்ளது. இதில் திமுக மூத்த நிர்வாகிகள்,அறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை மாலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்க நிறைவுரை ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர். 

Advertisment

அதே சமயம் திமுக 75 அறிவுத் திருவிழாவை முன்னிட்டு முற்போக்கு புத்தககாட்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பதிப்பகங்களின் முற்போக்கு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகத்தான பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் ஒருங்கிணைக்கும் திமுக75 அறிவுத்திருவிழா தொடங்குகிறது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 9.30 மணியளவில் கழகத்தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கத்தையும், நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் அரசியல் நூல்களின் அணிவகுப்பான ‘முற்போக்கு புத்தகக்காட்சி-2025’யையும் தொடங்கி வைக்கிறார். 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்  80க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் பங்களிப்பில் 1,120 பக்க அளவில் காலத்தின் தொகுப்பாக வெளியாகவிருக்கிறது `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல். இருநாட்களும் அறிவார்ந்த ஆளுமைகள் சிறப்பான கருத்துரை ஆற்றவுள்ளனர். அரசியல் கருத்துக்கள் நிரம்பிய முற்போக்கு நூல்கள் `சென்னை புத்தகக்காட்சி’யில் இடம்பெறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

Book release Udhayanidhi Stalin valluvar kottam youth wing mk stalin dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe