Advertisment

“நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?” - முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

agri-pro-mks

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர்  நரேந்திர மோடிக்கு கடந்த 17ஆம் தேதி (17.11.2025) கடிதம் எழுதியிருந்தார். அதில், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் முன்வைத்த நெல் கொள்முதல் ஈரப்பத தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

Advertisment

இதனையடுத்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூரில் இன்று (24.11.2025) காலை 10.00 மணியளவில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?

Advertisment

நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

eps-rally-dpi

போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என பழனிசாமி காத்திருக்கிறார்?. கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா?. மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?. உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 

dmk admk edappadi k palaniswami Farmers mk stalin Narendra Modi paddy paddy stock
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe