Advertisment

“செந்தில் பாலாஜியை முடக்கப் பார்த்தார்கள்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

senthil-balaji-mks

கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17.09.2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்த ஆண்டு முப்பெரும் விழாவைக் கரூரில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு,  செந்தில் பாலாஜி, என்னிடம் வந்தார். நானும் ஒப்புதல் அளித்தேன். 

Advertisment

பொதுக்கூட்டம் என்று சொல்லி, மாபெரும் எழுச்சி மாநாட்டையே இங்கே ஏற்பாடு செய்திருக்கிறார் செயல்வீரர் செந்தில்பாலாஜி . நாம் கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார். நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ரோடு போட்டு, அந்த ரோட்டு மேல்தான் நான் வாகனத்தில் வந்தேன். மேற்கு மண்டலத்தில் நம்முடைய எதிரிகளுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக இருப்பவர்தான் செந்தில் பாலாஜி. அதனால்தான், அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று, அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அவரை முடக்க முடியுமா?. 

எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுவார். நான் உறுதியாகச் சொல்கிறேன் திமுக வரலாற்றிலேயே, இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது. கொட்டுகின்ற மழையாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக் கொண்டு நாற்காலிகளைத் தலையில் வைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே இது ஒன்றே சாட்சி. இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று உழைத்த  செந்தில் பாலாஜிக்கும், அவருக்குத் துணை நிற்கும் கரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்” எனப் பேசினார். 

mk stalin karur dmk senthil balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe