16வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (20.02.2026) என்பதால் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவையில் உரையாற்றினார்.  அதில், “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வும் சமூக நிதியும் பேரறிஞர் பிறந்தகை அறிஞர் அண்ணாவின் இன உணர்வும் மாநில சுயாட்சி கொள்கையும், கலைஞரின் சிறப்பான நிர்வாகமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட திராவிட மாடல் அரசை கடந்த ஐந்த ஆண்டு காலத்தில் நடத்திக் காட்டி இருக்கிறோம் என்ற மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். 

Advertisment

எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிக சிறப்பாகவே செய்ததாகவே நான் நினைக்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன்னர் அமர்ந்த பலரும் இன்றைக்கு நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவருமே போற்றப்படக்கூடியவர்கள் தான். ஆட்சி சக்கரத்தை உயர்த்தி பிடித்தது மகத்தானது. தலைமைப் பொறுப்பு உள்ளோருக்கும் பொறுமை, நிதானம், சகிப்பு தன்மை, காலநேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பு கருணையோடு இருத்தல், கடமை தவறாமை ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைபிடித்திருக்கிறேன். 

Advertisment

ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு, அந்த முடிவினால் விளையும் பயன் பயன்பெற்றவர்களின் உயர்வு, அந்த உயர்வினால் உண்டாகும் வளம், அந்த வளத்தினால் விளைந்திடும் இன்பம், அந்த இன்பத்தால் கிடைத்திடும் நன்மை இதுவே நாம் இப்போது காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. இந்த நன்மையே மக்களுக்கு நம்பிக்கை தந்து நாளைய ஆட்சியாளர்களாக எங்களை தொடர செய்யப்போகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இந்த மு.க. ஸ்டாலின் இன்றைக்கு, இன்னும் வலிமை பெற்று தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்கும் முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். நம்பிக்கையோடு இன்னும் உழைக்க வேண்டும் என ஊக்கத்தையும் எதனையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளேன். 

mks-assembly3

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து எங்களுக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் நான் செயலாற்றி இருக்கிறேன்.இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நூற்றாண்டை கடந்த பெருமையோடு இயங்கி வருகிறது இந்த பேரவை.

Advertisment

governor-mks-appavu
கோப்புப்படம்

கடந்த 2021ஆம் ஆண்டு இந்த பேரவையினுடைய நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்து நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞரின் படத்தையும் திறந்து வைத்த அன்றைய  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தன்னுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும் அது யாராக இருந்தாலும் எதிர்க்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன். தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு ஆளுநருக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.