தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஐரோப்பியப் பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும்” என்ற தலைப்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம் என்னுடைய வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்கள், அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் என்று மக்களுடன் ஸ்டாலின் ஆப்ல கேள்விகள் வந்திருக்கிறது. அதற்கான பதில்களை உங்களின் ஒருவன் பதில்கள் மூலம் உங்ககிட்ட இன்றைக்கு பகிர்ந்துக்கிறேன். 

Advertisment

முதலாவதாக, “அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா? . தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாடு பற்றின பார்வை எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “முதலீட்டாளர்கள் சந்திப்பைப் பொறுத்தவரைக்கும் ஜெர்மனியில் முதலீட்டாளர்களைச் சந்தித்து நம்ம தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம்?. எவ்வளவு படித்த திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். இங்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சிலபஸ் தாண்டி எப்படி எல்லாம் ஸ்கில் டெவலப்மென்ட் பண்றோம்னு பிரசென்டேஷன் பண்ணோம். 

அதைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி வியந்து பேசினார்கள். ஜெர்மனி நாட்டில் என்.ஆர். மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மினிஸ்டர் பிரசிடென்ட்டை சந்திக்கப் போனபோது அவர்கள் கான்வாயில் என்னை அழைத்துக் கொடுத்த வரவேற்பிலேயே அவர்கள் எந்த அளவுக்குத் தமிழ்நாட்டின் மீது மதிப்பு கொடுக்கிறார்கள் என்று தெரிந்தது. முதலீட்டாளர்களிடம் பேசும்போது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு நாம் வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதைப் பெருமையோடு சொன்னார்கள். அதோடு அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டு போவதையும் ஒரு செக்டரை மட்டும் ஃபோகஸ் பண்ணாமல் எல்லா செக்டாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதுசா வளர்ந்து வர துறைகள் மேலையும் கவனம் செலுத்துகிறதையும் அவர்கள் அதிகமா பாராட்டி பேசுனாங்க. 

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமா இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்கான தொலைநோக்கு திட்டங்களைத்தான் இப்போது திராவிட மாடல் அரசில் செயல்படுத்திக்கிட்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். இரண்டாவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் போனது பற்றியும், வெளிநாடு வாழ் தமிழர்களைச் சந்தித்தது பற்றியும் உங்களோடு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், “ஆக்ஸ்போர்ட் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான யூனிவர்சிட்டி. 

Advertisment

periyar-img-mks

அங்கே பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள் மாணவர்கள் அவங்களுக்கு முன்னாடி தந்தை பெரியாருடைய படத்தைத் திறந்து வச்சுட்டு அவரைப் பத்தி பேசினப்போ மெய் சிலிர்த்ததுன்னு சொல்லுவாங்கள அப்படி இருந்துச்சு. ஜெர்மனி மற்றும் லண்டனில் தமிழ்நாட்டைச் சார்ந்த யாரைச் சந்தித்தாலும் அவர்கள் சொன்னது இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறித்தான் வெளிநாடு வந்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து பண்ணது தான் நான் இந்த அளவுக்கு முன்னேறி வரக் காரணம். 

அரசு பள்ளியில் படித்து இப்ப லண்டனில் உயர்கல்வி படிக்கிற மாணவர்கள் திராவிட மாடல் அரசுக்குக் கொண்டு வந்த ஃபுல் ஸ்காலர்ஷிப்போட இங்க இருக்கணு சொன்னார்கள். இந்த மாதிரி பல மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாக என்னோட ஐரோப்பா பயணம் இருந்துச்சு. நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அங்க உள்ள மக்கள் பொது இடங்களில் எந்த அளவுக்கு செல்ப்டிசிப்ளின கடைபிடிக்கிறாங்கன்னு கவனித்தேன். இந்த பொறுப்புணர்ச்சி இங்கேயும் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.