சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நேற்று (04.12.2025) தீபமேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் ஏராளாமானோர் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். இதனையடுத்து மலை மீது ஏறி தீபம் ஏற்ற முயன்றனர். அப்போது, 144 ரத்து உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. அதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், பா.ஜ.க தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, ‘கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள்’ என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் 2வது நாளாக மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?. மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், எய்ம்ஸ் (AIIMS), புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள். இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/mks-madurai-2025-12-05-10-29-48.jpg)