Advertisment

“தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்” - முதல்வர் உறுதி!

gcc-sanitation-worker-food-mks-2

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.11.2-20250 தொடங்கி வைத்தார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “இரவு பகல் பார்க்காமல் நீங்கள் உழைக்கிறீர்கள்... ஆனால், உங்களுக்கென்று தனியாக ஓய்வறை இல்லை என்று பலரும் கவலைப்படுவதாக என்னிடம் சொன்னார்கள்... பலபேர் என்னிடத்தில் சொன்னார்கள். அதனால், இந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

Advertisment

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவைகள் கொண்டு வரப்படும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். 

Advertisment

நான் ஏற்கனவே சொன்னது போல, உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்! என்னைப் பொறுத்தவரைக்கும். வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு சென்னை தான் இந்தியாவிலேயே - ‘கிளீன் சிட்டி’, தமிழ்நாடு தான் ‘கிளீன் ஸ்டேட்’ என்று சொல்ல வேண்டும்! அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும்! இந்த நிலையை நாம் உடனே அடைந்துவிட முடியாது. நன்றாக தெரியும். ஏனென்றால், இதற்கு பல நடைமுறை சிக்கல்களும், தடைகள் எல்லாம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை! இருந்தாலும், நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது” எனத் தெரிவித்தார். 

gcc-sanitation-worker-food-mks

மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்.

தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும். மக்களும் சுய ஒழுக்கம் (Self Discipline) கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு (SanitaryWorkers) அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்” எனத் தெரிவித்துள்ளார். 

chennai corporation food mk stalin sanitary workers tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe