Advertisment

“இ.பி.எஸ்.ஸுக்கு நன்றி” - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

cm-mks-assembly2

16வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (20.02.2026) என்பதால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவையில் உரையாற்றினார். அதில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் பேரவை தலைவராக பணியாற்றும் அப்பாவு அமைதியாகவும் கண்ணியத்தோடும், அதே நேரத்தில் கட்டுப்பாட்டோடும் தன்னுடைய ஆற்றலால் இந்த பிறவையை சிறப்பாக நடத்திச் சென்றிருக்கிறீர்கள். அதற்காக என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்வதோடு இந்த பேரவையில் பெரும்பான்மை இடம் பெற்றுள்ள கட்சியின் தலைவர் என்கிற முறையிலே உங்களுக்கு என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

தங்களுக்கு துணையாக நின்று பேரவையின் துணைத்தலைமை பொறுப்பை ஏற்று அமைதியாக சிறப்பாக பேரவையை நடத்தும் பேரவை துணைத்தலைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் நன்றிகள். இப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறக்கூடிய நேரத்தில் கருத்து மோதல்களை எதிர்கொண்டு கட்சி வேறுபாடு வெளிப்படுகையில் தன்னுடைய அனுபவத்தாலும், அறிவாற்றலாலும்,  நினைவாற்றாலும் அமைதிப்படுத்த கூடியவர் பேரவையின் மூத்த உறுப்பினர் அவை முன்னவர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் தற்போது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கும் என்னுடைய நன்றிகள். பாராட்டக்கூடிய வகையிலே பணியாற்றும் அரசு தலைமை கொறாடாவுக்கும் என்னுடைய நன்றிகள்.

Advertisment

மக்கள் பணியானாலும் சரி, வருகின்ற தேர்தல் பணிகள் ஆனாலும் சரி என்னில் ஒரு பாதியாய் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆட்சியின் சிறப்பிற்கும் உறுதுணையாக நிற்கும் துணை முதலமைச்சருக்கு என்னுடைய பாராட்டுக்கள் நன்றிகள். முக்கியமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் உருவாக்கினாலும் அவை சிந்தாமல் சிதராமல் மக்களிடம் சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அமைச்சர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

mks-eps-mic
கோப்புப்படம்

குறைகளை சொல்பவர்கள் நம் முன்னேற்றத்திற்கு சிறகுகளை தரக்கூடியவர்கள் என்று எண்ணி செயலாற்ற கூடியவன் நான். அரசுக்கு தக்க யோசனைகளை கூறுவதிலும் குறைகளை சுட்டி காட்டுவதிலும், கண்ணியமான முறையை கடைபிடித்து ஒத்தழைப்பு நல்கிய எதிர்கட்சி தலைவர் இன்றைக்கு வரவில்லை இருந்தாலும் அவர்களுக்கும், மற்றுமுள்ள கட்சி தலைவர்களுக்கும், எங்கள் சாதனைகளுக்கு எல்லாம் தோளோடு தோள் நின்ற தோழமை கட்சி தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

budget session Edappadi K Palaniswamy mk stalin tn assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe