செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு கடந்த 04ஆம் தேதி (04.10.2025) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை பெரியார் திடலில் சந்தித்து ரூ.1.70 கோடிக்கான காசோலையை திமுக தலைவரும், முதல்வரும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ (ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) தமிழர் தலைவர் கி.விரமணியிடம் வழங்கினேன். 

Advertisment

பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். திருச்சி சிறுகனூரில் பெரியாரின் சிந்தனைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் பெரியார் உலகம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.